மகளிர் தின விழா கொண்டாட்டம்_ 2020



     எங்கள் மீனாட்சி கல்வியல் கல்லூரியில் 
மகளிர் தின விழாகொண்டாட்டம்
கோலாகலமாககொண்டாடப்பட்டது.எமது  கல்லூரி முதல்வர் முனைவர்  டாக்டர்  சா. மில்டன் அவர்களது தலைமையில் அனைத்து உதவி பேராசிரியர்களும் இதில் இனிதே கலந்து கொண்டனர்.
   மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நடத்தினார்கள். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.





எமது  கல்லூரி முதல்வர் முனைவர்  டாக்டர்  சா. மில்டன் அவர்கள் தன்னுடைய உரையில் பெண்களின் மேன்மையும் நாங்கள் எவ்வாறு வாழ வேண்டும் எனவும் தன்னுடைய சிந்தனை கருத்துகளை ஒரு நொடி பொழுதில் மலர்களை போல் அள்ளி தூவி விட்டது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.


எமது கல்லூரியின் உதவி பேராசிரியை திருமதி ரெஜினா அவர்கள் தன்னுடைய அதிரடி பேச்சினால்  அரங்கையே  அதிரவைத்தார். அவருடைய பேச்சில் பல உண்மைகள் உருண்டோடி இருந்தது.



கவிதை 
           தாயும் தாரமும்

தாய் - கருவில் சுமப்பவள்
தாரம்  - கழுத்தில் சுமப்பவள்
தாய் - பெற்றெடுப்பவள்
தாரம் - தத்தெடுப்பவள்.
தாய் - இதய துடிப்பு தருபவள்
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்
தாய் - உலகின் முதல் தெய்வம்.
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்
தாய் - பந்தைய களம் வரை அழைத்துவருபவள்
தாரம் - பந்தையத்தில் பங்கு பெறுபவள்
தாய் - உயிர்
தாரம் - உயிரும் உடலும்
தாய் - நேற்று இன்று
தாரம் - இன்று நாளை
தாய் - உலகின் தோற்றம்
தாரம் - உலகின் வளர்ச்சி

இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு
பெண்மையின் சிறப்பு தாய்மைக்கு இருக்கு.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.


பெண்கள் தின விழாவனது இனிதே நடந்து முடிந்தது. இந்த அனுபவம் என்றும் நிலைத்து நிற்கும்.




Comments

Popular posts from this blog

Trip to ooty