பிரபஞ்சமே பயத்தின் அச்சத்தில் உறைந்து கிடக்கும் இந்நாட்களில் , பயத்தை நீக்கி , பயனுள்ள விதத்தில் நேரத்தை வீணாக்காமல் நமது மூளைக்கு நல்லவற்றை கொடுத்து பயன் பெறுவோம். இதோ உங்களுக்காக என்னால் முடிந்த சில உதவிகள்.
( இதை வாசித்து சரியான பதில் எழுத வாழ்த்துக்கள் !)
ஊக்குவித்தல்
- பிராய்டின் இயல்பூக்கக் கோட்பாடு:
மனிதனின் செயல்களுக்கு அடிப்படையாக அமைவது இயல்பூக்கம் ஆகும்."ஒரு உயிரினை செயல்படத் தூண்டும் பிறவியுடன் கூடிய உந்து சக்தியைத்தான் இயல்பூக்கம் என அழைக்கிறோம்.
- இயல்பூக்கங்கள் இருவகைப்படும்
1. உயிர்வாழ் இயல்பூக்கங்கள்
2. அழிவு இயல்பூக்கங்கள்
1.உயிர்வாழ் இயல்பூக்கங்கள்
பசி,
தூக்கம்,
பாலுணர்வு தேவைகள்.
2.அழிவு இயல்பூக்கங்கள்
கோபம்,
அழிவு,
கொலை,
போர்.
பிறப்பு முதல் இறப்பு வரை இதன் அடிப்படையில் மனித நடத்தைகள் அமைகின்றன.
அடைவூக்கம்
அடைவு ஊக்கி என்பது ஏதோவொன்றை சாதித்ததை மட்டும் குறிப்பது அல்ல மாறாக அந்த சாதனை அடைய செய்யும் செயல்களும் அடைவூக்கியாகும்.
அடைவு ஊக்கத்தை அளவிடுதல்
தரம், அளவு அடிப்படையில் அடைவூக்கத்தை ஆராய்ந்தவர்கள் டேவிட்மெக்லிலேண்டு(1953)டபிள்யூ. ஜான் அட்கின்சன் (1958) பொருள் அறிவோடு, இணைத்தல் சோதனை ( TAT) போன்ற படங்கள் அடங்கிய அட்டைகளை பயன்படுத்தினர். (TAT_ thematic apperception test) இதனடிப்படையில் கேட்கும் கேள்விகள்,
2. காட்சிக்கான காரணம் என்ன?
3. என்ன நிகழலாம்?
4. என்ன எண்ணுகிறாய்?
நேர்மறை அல்லது பொருத்தமான விடைகள் ஒவ்வொன்றும் மதிப்பெண் பெறுகிறது எதிர்மறை அல்லது பொருத்த மற்ற விடைகள் ஒவ்வொன்றும்
பூஜ்யம் மதிப்பெண் பெறுகின்றது. மதிப்பெண்ணின் அடிப்படையில் அடைவூக்கத்தை நிர்ணயிக்கின்றனர்.
அடைவு ஊக்கத்தை மாணவர்களிடையே மேம்படுத்துதல்/வளர்த்தல்
Need for achievement என்று அடைவு ஊக்கத்தை ஆங்கிலத்தில் கூறுவர். ஒரு மனிதனுக்கு வெற்றி பெற தேவைகள் அதிகமாக இருக்கும்பொழுது நிறைய பிரச்சினைகள் ,சவால்கள், தடைகள் சந்திக்க வேண்டிய சமயத்தில் இவையே ஊக்குவித்தலாக மாறி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது. அடைவு ஊக்கம் இரு கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது
- சாதனை புரிவதற்கான ஆற்றல் (ability to achieve success)
- தோல்வியைத் தவிர்தலுக்கான ஆற்றல்( ability to avoid failure)
அடைவு ஊக்க கோட்பாடு 1951இல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் டேவிட் கிளாரென்ஸ் மேட்லிலெண்டு மற்றும் அட்கின்சன் இருவரும் இணைந்து உருவாக்கினார்கள். இவர்களைப் பொறுத்தவரை ஊக்குவித்தல் இரண்டு முக்கிய காரணிகளை கொண்டுள்ளது.
1. சூழ்நிலை
2. காவல்நிலை
இயற்கையின் வேறுபாடற்ற சூழ்நிலையிலிருந்து எல்லா மனிதர்களும் ஊக்குவித்தல்களைக் கற்றுக்கொள்கின்றனர்.அடைவு ஊக்கத்தை மாணவர்களிடம் வளர்ச்சியடையச் செய்ய பொருத்தமான முறையை ஆசிரியர் தேர்ந்தெடுக்க வேண்டும் சில வழிமுறைகள்.
- உயர்ந்த மனிதர்களை பற்றிய படைப்புகள் மாணவர்களிடம் உயர்ந்த அடைவூக்கத்தை வளர்ச்சியடையச் செய்யும்.
- தகுந்த பள்ளி சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தல்.
- மாணவர்களை குழு வேலைகளில் ஈடுபடச் செய்தல்.
மெக்லிலெண்டு 1965 மனிதர்களிடையே அடைவு ஊக்கத்தை வளர்ப்பதற்கு வேண்டிய சில வழிமுறைகளை கூறியுள்ளார்.
- ஊக்கத்தை நம்புதல்
தனிமனிதன் தனக்குள்ளே ஊக்கம் இருப்பதை நம்பும் பொழுது தான் கல்வி முயற்சியினால் ஏற்படும் அடைவு ஊக்கம் வெற்றிகரமானதாக அமையும்.
2. உண்மையான ஊக்கம்
தனி மனிதன் அவனுடைய ஊக்கம் உண்மையானது காரணம் உடையது என்று புரிந்து கொள்ளும் பொழுது அடைவு ஊக்கம் வளர்ச்சி அடைகிறது.
தனிமனிதன் ஊக்கத்தை புரிந்து கொள்வதில் உள்ள பல நிலைகளை தெளிவாக விவரிக்கும் பொழுது அவனிடம் உள்ள அடைவு ஊக்கம் வளர்ச்சி அடைகிறது.
4. ஊக்கத்தை செயல்களுடன் இணைத்தல்
தனிமனிதன் ஊக்கத்தை தொடர் செயல்களுடன் இணைக்கும் பொழுது எண்ணங்களிலும் செயல்களிலும் மாற்றங்களும் சகிப்புத்தன்மை உண்டாகிறது.
5.ஊக்கத்தை நிகழ்வுடன் இணைத்தல்
தனிமனிதன் ஊக்கத்தை நடைமுறை வாழ்க்கையுடன் இணைக்கும் பொழுது அடைவு ஊக்கம் எண்ணத்திலும் செயலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
6.சுயமரியாதையில் முன்னேற்றம்
தனி மனிதன் தன்னுடைய சுயமரியாதையை ஊக்கம் வளர்க்கும் என்று அறியும் பொழுது அடைவு ஊக்கம் எண்ணங்களிலும் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
7.குறிக்கோளை அடைவதற்குரிய பொறுப்புகள்
தனி மனிதன் தனது வாழ்க்கை குறிக்கோள்களை அடைவதற்கு அடைவு ஊக்கம் அவனது எண்ணங்களிலும் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
8.முன்னேற்றத்தை பதிவு செய்வது
தனிமனிதன் குறிக்கோளை அடைவதற்கான முன்னேற்றத்தை பதிவு செய்யும் பொழுது அடைவு ஊக்கம் எண்ணங்களிலும் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
9.நேர்மை மற்றும் ஆர்வமுள்ள ஆதரவு
ஆர்வத்துடன் ஆனால் நேர்மையான ஆதரவை ஒருவன் உணரும் பொழுது மற்றும் வழிகாட்டுபவர் அல்லது அவனுடைய எதிர்காலத்தை வழிநடத்துபவர் ஆகியோரால் மதிக்கப்படும் பொழுது தூக்கமானது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்.
10.தனியாக படித்தலின் முக்கியத்துவம்
அன்றாட வாழ்க்கையில் தனியாகப் படித்தால் மனதில் எந்த அளவு நாடகம் போல படுகிறதோ அந்த அளவு முகத்தில் மாற்றம் ஏற்படும்.
********************************************************************************
Comments
Post a Comment