அன்னையர் தினம்
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகின் பல நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. தாய்மையைப் போற்றும் விதத்தில் பண்டைய காலத்திலிருந்தே இத்தினம் கொண்டாடப்படுவதாக சான்றுகள் கூறுகின்றன.
குடும்பத்தின் நன்மைக்காக தன்னையே அர்ப்பணித்து அன்னையின் குணம், எதையும் எதிர்பார்க்காமல் நிழல் போல இருந்து, தன்னை சார்ந்தவர்களை காப்பது தாய்மைக்கே உரிய தனிச்சிறப்பு. அத்தகைய தாய்க்கு வாழ்த்து அட்டை வழங்குவது, கேக் வெட்டுவது, வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் பக்கங்களில் வாழ்த்து சொல்லி ஸ்டேட்டஸ் போடுவது போன்ற செயல்கள் மட்டுமே அன்னையர் தின கொண்டாட்டம் ஆகாது.
பரபரக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் தாயின் உணர்வுகளை மதித்து ,அவருக்கென சிறிது நேரம் ஒதுக்கி,உண்மையான அன்புடன் சில வார்த்தைகள் பேசுவது கூட அன்னையர் தினம் கொண்டாட்டம் தான்.
ஒரு தாய் இரவும் பகலும் தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர்களை வாழ்வில் சிறக்க செய்கிறாள். வளர்ந்து வாழ்வில் நல்ல நிலைக்கு வரும் பிள்ளைகள், தன்னை உயர்த்தி அன்னையைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் இருப்பதுதான் இங்கு நெஞ்சை உறுத்தும் நிதர்சனம்.
தனிமை மட்டுமே துணையாக இருப்பதால், மன அழுத்தம் கூடி தன்னிலை மறந்து நடமாடும் சவங்களாய் வாழும் அன்னைகள் அநேகம் பேர் உள்ளனர் . இன்றைய நாளில் நீர்க்குமிழி போல சட்டென்று மறைந்து போகிறது மனித வாழ்வு. சென்ற பின்பு நினைவு கூறுவதை விட்டுவிட்டு, இருக்கும்போது அன்போடும் ,ஆதரவோடும் இருப்போம். தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு போல நம் நன்மைக்காக வாழும் தாயை மதித்துப் போற்றி வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.
அம்மா ஒவ்வொரு இல்லத்தின் அசைக்க முடியா அடித்தளம்.
ஒரு வீட்டை இல்லமாக மாற்றுவாள்
அந்த இல்லத்தை வசதியாகவும் சுகமாகவும் மாற்றுவாள் மற்றவர்களைப் பற்றி எப்பொழுதும் சிந்திப்பாள்
அவர்களின் தேவைகளையும் ஆசைகளையும் அறிவாள்
தன் விருப்பங்களுக்கு முன் மற்றவர்கள் விருப்பம் என நினைப்பாள்
முன் எழுந்து பின் தூங்குவாள் எல்லோருக்கும் உணவு கொடுப்பாள்
அந்த உணவும் இனிப்பாக இருக்கும் அவள் கொடுத்ததால்
ஆனால் நாங்கள் நிறைவாக இருப்போம் அவள் போட்ட உணவாலும் அன்பாலும்
இன்று நாம் அவளை கவுரவிக்க வேண்டும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment