Teaching practice began












இன்று புதிய நாள்! 
 நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த நன்னாள்!

மீனாட்சி கல்வியியல் கல்லூரியில் இருந்து நாங்கள் ஐந்து பேரும் எங்களுடைய ஆசிரியர் பயிற்சிக்காக புனித பிரான்சிஸ் சேவியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்தழகுபட்டி சென்றிருந்தோம்.
அங்கு தலைமை ஆசிரியை அருட்சகோதரி  திரேசாள் மேரி
அவர்களைக் கண்டு ,எங்களுடைய முதன்மை கல்வி அலுவலரின் கடிதத்தையும் அதனுடன் எமது கல்லூரியின் முதல்வர் திரு மில்டன்.ச அவர்களது கடிதத்தையும் ஒப்படைத்து நாங்கள் பயிற்சிக்கு வருவதாக அவரிடம் கூறினோம். அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார் .எங்களுக்கு எந்தெந்த வகுப்புகளில் நாங்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதையும் எங்களுக்கு விளக்கினார். அதோடு நாளையிலிருந்து நாங்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை கூறினார். மற்ற விவரங்களைங்கள் அங்கு செல்லும் போது எங்களுக்கு தெரிவிப்பதாகக் கூறினார்.
நாங்கள் ஐந்து பேரும் மன மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம் .
இன்று எங்களுடைய அனுபவம் புதிதாக இருந்தது ,சந்தோசமாகவும் இருந்தது.

Comments