Std 9 Mathematics
Unit 3: இயற்கணிதம் 1. மாறி மாறி என்பது வெவ்வேறு எண் மதிப்புகளைக் கொண்ட குறியீடு ஆகும். 2. மாறிலி மாறிலி என்பது நிலையான எண் மதிப்பு கொண்ட குறியீடு ஆகும். எந்த மெய்யெண்ணும் மாறிலியே. 3. இயற்கணிதக் கோவை இயற்கணிதக் கோவை என்பது நான்கு அடிப்படைக் கணிதக் குறியீடுகளின் உதவியுடன் மாறி மற்றும் மாறிலிகளால் இணைக்கப்பட்டு அமையும் கோவை ஆகும். 4. கெழுக்கள் ஒரு பல்லுறுப்புக் கோவையில் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள மாறிகளின் பெருக்கல் காரணியே அதன் கெழு எனப்படும். 5. பல்லுறுப்புக்கோவை ஒரு பல்லுறுப்புக் கோவை என்பது மாறிகள் மற்றும் மாறிலிகளைக் கொண்டு நான்கு அடிப்படைச் செயல்களால் இணைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். இங்கு மாறிகளின் அடுக்குகள் குறையற்ற முழுக்கள் ஆகும். 6. பல்லுறுப்புக் கோவையின் திட்ட வடிவம் P(x) என்ற பல்லுறுப்புக் கோவையை அதன் x இன் அடுக்கைப் பொருத்து இறங்கு வரிசையிலோ அல்லது ஏறு வரிசையிலோ எழுத இயலும். இது பல்லுறுப்புக் கோவையின் திட்ட வடிவம் எனப்படும். 7. பல்லுறுப்புக் கோவையின் படி ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக் கோவையில், மாறிய...