சாய்க்கிரோ ஹோண்டா
🔥🔥 " வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே.." உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மனிதனை பற்றிப் படியுங்கள்.. முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.. தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.. அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக்கொண்டிருப்பார்கள்.. அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் " சாய்க்கிரோ ஹோண்டா.." தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று .. “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.. Toyoto நிறுவனத்திற்கு Piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் பெரும் கனவு .. யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை .. அப்பாவின் திட்டு ,சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928 ஆம் ஆண்டு உருவாக்கினார்.. இதற...