தேங்காயை உடைத்து துருவி அதிலிருந்து எடுக்கப்படுவது தேங்காய்ப் பால். இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. முற்றிய தேங்காய்தான் பால் எடுக்கச் சிறந்தது. தேங்காய்ப் பாலில் வைட்டமின்கள் சி, இ, கே, பி1, பி2, பி3, , பி5, பி6 மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும் உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை ஆகியவை உள்ளன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உள்ள தேங்காய்ப் பாலில் தாய்ப்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் நிறைந்துள்ளது. லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் உதவக்கூடியது என்பதால், சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய்ப்பால் கொடுக்கலாம். மேலும் இதிலுள்ள எலும்பு அழற்சித்தன்மை வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கும். தேங்காய்ப் பால் கொழுப்பு இருக்கும் என்று அதை அருந்த யோசிக்கிறார்கள். லாரிக் அமிலம் நிறைந்த நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் ...